ஒரு சமயம் கடவுளிடம் இரெண்டு மனிதர்கள் தான் துன்பம் படுவதை பற்றி வேண்டினார்கள் அதற்கு கடவுள் குமரன் , செல்வன் என்று இரெண்டு மனிதர்களை பார்த்த கடவுள் அளவில் பெரியதான சிலுவைகளை சுமந்து செல்லுமாறு ஆணையிடுகிறார், பின் சிலுவையை சுமந்து மலைகளையும் காடுகளையும் கடந்து வரும் மனிதரில் ஒருவன், குமரன் கடவுளை பார்த்து தான் சுமந்து வரும் சிலுவை மிகுந்த எடை உள்ளதாகவும் தன்னால் சும்மக்க முடியவில்லை என்றும் வேண்டினான். பின் கடவுள் அவனிடம் மறுப்பு கூறாமல் ஒரு அரம் கொடுத்து வேண்டிய சுமையை குறைத்கொல்லுமாறு கூறினார்.
பின் அவன் அந்த அரத்தை பயன்படுத்தி சிலுவையீன் சில பகுதியை அகற்றினான் ஆனால் மற்றொருவன் (செல்வன்) ஏதும் கூறாமல் கடவுள் இட்ட பனி என்று செய்துவந்தான் .சில துரம் சென்ற பின் மிண்டும் தன்னால் சும்மக்க முடியவில்லை என்றும் வேண்டினான் குமரன் பின் கடவுள் அவனிடம் மறுப்பு கூறாமல் மீண்டும் அரம் கொடுத்து வேண்டிய சுமையை குறைத்கொல்லுமாறு கூறினார். ஆனால் செல்வன் தன் பயணத்தை தொடர்தான்
இப்படி இருவரும் பயணிக்க ஒரு மலை பிளவு தென்பட்டது பின் கடவுள் தோன்றி இந்த பிளவை கடந்தால் துன்பம் இல்லா சுகமான வாழ்கை அமையும் என்று கூறி மறைந்தார் உடனே செல்வன் தனிடம் இருந்த சிலுவையை மலை பிளவின் குறுக்கே செலுத்தி மலையை கடந்தான் ஆனால் குமாரனால் கடக்க முடியவில்லை என்னென்றால் தான் வைத்திருந்த சிலுவை மலையை கடக்க போதுமானதாக இல்லை என்பதை உணர்த்து முடங்கிணன்.
வாழ்கையில் வரும் துன்பத்தையும்,தோல்வியையும் கண்டு துவளாமல் பயணித்தல் அதுவே நாளைய வெற்றிக்கு பாலமாக அமையும் என்பதை உணர்த்தும் கதையே இது.
No comments:
Post a Comment